×

பெல் நிறுவனம் கைப்பற்றியது 10ம் வகுப்பு தேர்வில் அதிகம் மதிப்பெண்கள், 100% தேர்ச்சி மாநகராட்சி பள்ளி மாணவிகள் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கல் பெரியாரியல் சிந்தனையாளர்களுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் பெரியார் விருது

திருச்சி, ஜூன் 12: திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் பெரியாரியல் சிந்தனையாளர்களுக்கு பெரியார் விருதுக்கு ஆக.16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் கொள்கைகளை பரப்பி வரும் பெரியாரியல் சிந்தனையாளர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி மூத்த பெரியாரியல் அறிஞர் ஒருவருக்கு ‘பெரியார் சிறப்பு விருது’ மற்றும் பொற்கிழி ரூ.1,00,000, பெரியாரியல் அடிப்படையில் சமூகப்பணியாற்றுகின்ற ஒருவருக்கு ‘பெரியார் விருது’ மற்றும் பொற்கிழி ரூ.50,000, பெரியாரியல் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்ட நூல்களில் சிறந்த ஒரு நூலின் ஆசிரியருக்கு ‘பெரியார் பரிசு’ மற்றும் பொற்கிழி ரூ.50,000 கடந்த 5 ஆண்டுகளாக வழங்கி சிறப்பித்தது.

அதன்படி, இந்த ஆண்டும் பெரியாரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிச் சமூக தொண்டாற்றி வரும் பெரியாரியல் சிந்தனையாளர்களுக்கு, பெரியார் பிறந்தநாள் விழாவின் போது பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் பெரியார் சிறப்பு விருது, பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது. மேலும், 2018ம் ஆண்டில் பெரியார் சிந்தனைகள் குறித்து எழுதி வெளியிடப்பட்ட சிறந்த நூல் ஒன்றுக்கும் பரிசு வழங்கப்படவுள்ளது. எனவே, தகுதியுடையோரை தேர்வு செய்ய ஏதுவாக பெரியாரியல் சிந்தனையாளர்கள் பற்றிய விவரக் குறிப்பினையும், 2018ம் ஆண்டில் பெரியார் குறித்து வெளியிட பெற்ற நூலின் 2 படிகளையும் இயக்குநர் (பொ), பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி எனும் முகவரிக்கு வரும் 16.8.2019 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இத்தகவலை பல்கலை பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : acquisition ,Bell ,school teachers ,pediatrician ,Trichy Bharathidasan University ,
× RELATED திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய...