×

போலீஸ் விசாரணை கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜூன் 12: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 13 ஆண்டுகளாக சாலை பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறா ஊழியருக்கான ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி வழங்க வேண்டும். முதன்மை இயக்குனர் பொறுப்புக்கு இந்திய ஆட்சிப்பணி அலுவலரை நியமிக்க வேண்டும். முதன்மை இயக்குனர் மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோரின் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கையை கண்டித்து பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags : Highway road workers ,
× RELATED தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை...