திருபுவனை அருகே சோகம் பொறியியல் பட்டதாரி தூக்கு போட்டு சாவு

புதுச்சேரி, ஜூன் 12: திருபுவனை அடுத்த திருபுவனைபாளையம் ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வுபெற்ற ஜிப்மர் ஊழியர். இவரது மகன் நரேஷ் (27). இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு, வீட்டில் கம்ப்யூட்டரில் டிஜிட்டல் டிசைனிங் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், வேலைக்காக ஒரு இயந்திரம் கூடுதலாக வாங்குவதற்காக நரேஷ் முடிவு செய்தார். இதற்காக அவர், தனது தந்தையிடம் ரூ.15 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு தந்தை ராஜேந்திரன், திண்டிவனத்தில் உள்ள நிலத்தை விற்று பணம் தருவதாக கூறியுள்ளார். ஆனால் நரேஷ் இதனை நம்பாமல், பெற்றோர் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துள்ளார். சம்பவத்தன்று மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரம், நரேஷ் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருபுவனை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>