×

ஆன்லைன் மூலமாக ஆர்டர்: போதைபொருள் பயன்படுத்திய 2 பேர் கைது

பெரம்பூர்: ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கி ஸ்டாம்ப் போதைபொருள் பயன்படுத்திய 2 பொறியியல் பட்டதாரி வாலிபர்களை நேற்று போலீசார் கைது செய்தனர். சென்னை பெரவள்ளூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ‘ஸ்டாம்ப்’ எனும் போதைப் பொருளை ஏராளமான வாலிபர்கள் பயன்படுத்தி வருவதாக நேற்று புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், கடந்த ஒரு வாரமாக பெரவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று காலை பெரவள்ளூர்,  ஜவஹர் நகர், 1-வது மெயின் ரோட்டில் சந்தேக நிலையில் நின்றிருந்த 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் தடை செய்யப்பட்ட ஸ்டாம்ப் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இருவரையும் பெரவள்ளூர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பெரவள்ளூர், 70 அடி ரோடு பகுதியைச் சேர்ந்த டேனியல் (23), வில்லிவாக்கம், பாபா நகரை சேர்ந்த பிரவீன்குமார் (24) என்பதும், இவர்கள் பொறியியல் பட்டதாரிகள் எனத் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ₹20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டாம்ப் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவர்கள் தனியாக ஆப் ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் ஸ்டாம்ப் போதைபொருளை ஆர்டர் செய்து வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பெரவள்ளூர் பகுதியில் தடை செய்யப்பட்ட ஸ்டாம்ப் போதைபொருள் எங்கெங்கு விற்பனை செய்யப்படுகிறது என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்….

The post ஆன்லைன் மூலமாக ஆர்டர்: போதைபொருள் பயன்படுத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு