சாலையில் திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரிப்பு

வானூர், ஜூன் 11:  வானூர் தாலுகா மொரட்டாண்டி ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 புதுச்சேரி- திண்டிவனம் சாலை போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியே சென்று வருகிறது. இந்த சாலையின் குறுக்கே மாடுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக படுத்துள்ளன. இதனால் வாகனங்களில் வருபவர்கள் அவைகள் கலைந்து செல்வதற்காக ஒலி எழுப்பினால் மாடுகள் திடீரென குறுக்காக ஓடுகிறது. அந்த நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மாட்டின் மீது மோதி விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு, படுகாயம் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கண்காணித்து அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Accidents ,
× RELATED விபத்துகளை தடுக்க சாலை குழிகளை மூடுங்கள்