×

நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் அவதி

ரிஷிவந்தியம், ஜூன் 11:   ரிஷிவந்தியம் அருகே பகண்டைகூட்ரோடு பகுதி உள்ளது. இங்கு சுமார் ஐந்தாயிரம் பேர் வசித்து வருகின்றனர். பகண்டைகூட்ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலகம், மின்சார அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட சில்லரை வணிகங்களும் உள்ளன. பகண்டைகூட்ரோட்டினை சுற்றி மையனூர், யால், நாகல்குடி, பெரியபகண்டை, ஏந்தல் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் வெளியூர் பயணம் செய்ய பகண்டைகூட்ரோடு வந்துதான் செல்ல வேண்டும். இங்கு பஸ் நிறுத்தத்தில் உள்ள மும்முனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் பொதுமக்கள் வெயிலில் பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருந்து ஏறிச்செல்லும் அவலம் நீடித்து வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளின் ஓரத்தில் பொதுமக்கள் அமர்ந்து பேருந்து ஏறிச் செல்கின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைவில் பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை