×

பழுதான சாலைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

ஈரோடு, ஜூன் 7:ஈரோடு நாச்சியப்பா வீதியில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை உள்ளே இறங்கி ஆங்காங்கே குழியாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், பாதாள மின்கேபிள் திட்டம் போன்ற திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதனால், ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டுள்ளது.  பாதாள சாக்கடைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டில் இருந்து நாச்சியப்பா வீதி, வாசுகி வீதி, சவீதா கார்னர் வரை சாலைகளை தோண்டி போட்டனர். தற்போது, பணி முடிந்த பிறகும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. மக்கள் போராட்டம் நடத்தி பிறகே இந்த சாலை புதிதாக போடப்பட்டது.

தற்போது இந்த சாலை ஆங்காங்கே ரோடு இறங்கி குழியாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக, வாசுகி வீதி 3வது பகுதியில் இருந்து சவீதா கார்னர் வரை பல இடங்களில் சாலைகள் பெயர்ந்தும், ஆங்காங்கே குழியாகவும் காட்சியளிக்கிறது. இந்த வழியாக அதிக வாகன போக்குவரத்து உள்ளதால் அடிக்கடி குடிநீர் குழாய்களில் உடைப்பும் எற்படுகிறது. இதனால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பழுதான சாலைகளை உடனடியாக சீரமைத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : motorists ,roadways ,
× RELATED வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை வீடியோ...