×

அக்ஷர்தம் சென்ட்ரல் சிபிஎஸ்இ பள்ளி திறப்பு

விழுப்புரம், ஜூன் 7: விழுப்புரம் பானாம்பட்டு பாதையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அக்ஷர்தம் சென்ட்ரல் சிபிஎஸ்இ பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது.
பள்ளியின் தாளாளர் டாக்டர் லட்சுமணன் எம்பி வரவேற்று, குத்துவிளக்கேற்றி வைத்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்பி வில்லியம் ரபிபெர்னார்டு கலந்து கொண்டு பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மேலாண் இயக்குநர் தனசேகரன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சங்கரநாராயணன், சென்னை அர்சுனாமூர்த்தி, விழுப்புரம் மகாலட்சுமி குரூப்ஸ் ரமேஷ், இந்தியன் வங்கி கோட்ட பொதுமேலாளர் வீரராகவன், டாக்டர் கேப்டன் ராமச்சந்திரன், டாக்டர்கள் மோகன், ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ
பழனியப்பன், பாதிரியார் பிரான்சிஸ் அகர்வால், பிளமின்தாஸ், விழுப்புரம் புனித இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்கலம்மேரி, புனித இருதய சிபிஎஸ்இ பள்ளி சுசீலா, விபிஎஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் செந்தில்குமார் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள இப்பள்ளி முற்றிலும் குளிரூட்டப்பட்ட, பார்க்கிங், மிகப்பெரிய விளையாட்டு மைதானம், தூய்மையான பள்ளி வளாகம், காற்றோட்டமான இயற்கை வசதி உள்ளிட்டவைகள் அடங்கியுள்ளது. மேலும் பயிற்சி பெற்ற வெளிமாவட்ட ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Akshardham Central CBSE School Opening ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை