இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் கெங்கையம்மன் திருவிழாவுக்கு தடை வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

வேலூர், ஜூன் 7: பேரணாம்பட்டு அருகே இருதரப்பினருக்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால், கெங்கையம்மன் திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பேரணாம்பட்டு அடுத்த கமலாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட சிந்த கணவாய் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில், ‘சிந்த கணவாய், கமலாபுரம், கவுராப்பேட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்றாக சேர்ந்து கெங்கையம்மன் திருவிழாவை கடந்த 75 ஆண்டுகளாக நடத்தி வந்தோம். தற்போது, சிந்த கணவாய் பகுதி மக்களை விட்டுவிட்டு கமலாபுரம், கவுராப்பேட்டை கிராமங்களை சேர்ந்தவர்கள் திருவிழா நடத்துகின்றனர். இதனால், இருதரப்பினரிடையே கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, திருவிழா நடத்த தடை விதிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.

Tags : festivals ,conflict ,Kenyamamman ,Collector ,
× RELATED இ சிகரெட்டுக்கு தடை