கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க முகாம்

தேனி, ஜூன் 4: தேனி அருகே தர்மாபுரி கிராமத்தில் கால்நடைகளுக்கான குடற்புழு நீக்க முகாம் நடந்தது. கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் கால்நடைகளுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்க மருத்துவ முகாம்கள் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் நடந்தது.

தேனி அருகே தர்மாபுரி கிராமத்தில் நேற்று முன்தினம் இத்தகைய முகாம் நடந்தது. இதில் குடற்குழு நீக்கம், மலடு நீக்கம், சினைபரிசோதனை,செயற்கை முறை கருவூட்டல், மற்றும் சுண்டுவாத அறுவைசிகிச்சை, கோழிக்கழிச்சல், தடுப்பூசிகள் போடப்பட்டது. இம்முகாம்களில் 24 ஆயிரத்து 180 கால்நடைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags : Disease removal camp ,
× RELATED உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட...