×

பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் சென்ற மாணவர்கள்

விழுப்புரம், ஜூன் 4: கோடைவிடுமுறை முடிந்து நேற்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் உற்சாகமாக சென்றனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டன.
50 நாட்கள் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. கோடைவெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறக்கும் தேதியை தள்ளிப்போட வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை இருந்தது. இருப்பினும் நேற்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டது. இதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பே பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டனர். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து இதனை உறுதி செய்து சிஇஓ அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி நேற்று காலை மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். முன்னதாக அவர்கள் கோயில்களுக்கு சென்று சாமிகும்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றனர்.

Tags : schools ,
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...