×

ஓலப்பாளையம் ஊராட்சியில் குழாய் பழுதானதால் 2 மாதமாக குடிநீரின்றி பொதுமக்கள் அவதி

பரமத்திவேலூர், மே 30: ஓலப்பாளையம் ஊராட்சி கோட்டணம்பாளையத்தில் பழுதடைந்த தொட்டியின் குழாயை சீரமைக்காததால் 2 மாதமாக பொதுமக்கள் குடிநீரின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.மோகனூர் ஒன்றியம் ஓலப்பாளையம் ஊராட்சி கோட்டணம்பாளையத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டி, தண்ணீர் நிரப்பி வாரம் ஒருமுறை பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு,  இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பும் குழாயில் பழுது ஏற்பட்டதால், தண்ணீர் நிரப்ப முடியவில்லை. இதனால் 2 கி.மீ தொலைவில் உள்ள மண்டபத்துபாறை பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து சைக்கிள், டூவீலர் மற்றும் தலையில் சுமந்து வந்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. குழாயை சீரமைக்கும்படி,  மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும், பயனில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பழுதடைந்த குழாயை சீரமைத்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Olappalayam ,
× RELATED திருப்பூர் அருகே அரசுபேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு