செங்கோட்டையில் வீதிவீதியாக தொகுதி மக்களுக்கு தனுஷ்குமார் எம்பி நன்றி

செங்கோட்டை, மே 30:  தென்காசி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் தனுஷ்குமார் எம்.பி., செங்கோட்டையில் வீதிவீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தென்காசி மக்களவைத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தனுஷ்குமார், 1.20 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதற்கான சான்றிதழை பெற்றதும் சென்னை சென்ற அவர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். பின்னர் அங்கு நடந்த திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார். பின்னர் ஊர் திரும்பிய தனுஷ்குமார் எம்.பி., வாக்காளர்களை சந்தித்து நன்றி கூறி வருகிறார். இதையொட்டி செங்கோட்டை வந்த அவர், நகர திமுக செயலாளர் ரஹீம் தலைமையில் வீதிவீதியாக  திறந்தவெளி ஜீப்பில்  நின்றவாறு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடுவேன்’’ என்றார்.

நிகழ்ச்சியில் கலைஞர் தமிழ்ச் சங்கச் செயலாளர் ஆபத்து காத்தான், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்  வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலாளர் பேபி ரஜப் பாத்திமா, மாவட்ட பொருளாளர் ஷேக்தாவூது , இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகச்சாமி, இசக்கி துரைபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், வக்கீல் அணி லூக் ஜெயக்குமார்,  நகர நிர்வாகிகள் காளி, பாஞ்ச் பீர் முகமது, குட்டி ராஜா, ஜெயராஜ், மாவட்டப் பிரதிநிதி கல்யாணி, பூங்கொடி, குமார், டெய்லர் சரவணன், கோபால், பால் அய்யப்பன், கலைஞர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஜோதிமணி, பெர்னாட்ஷா, இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் மாரியப்பன், மார்க்சிஸ்ட் நிர்வாகி
சுப்பிரமணியன் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

Tags : Dhanush Kumar MP ,Chenkottai ,
× RELATED சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும்...