×

இடைப்பாடி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

இடைப்பாடி, மே 29: இடைப்பாடி அருகே அரசிராமணி பேரூராட்சி பகுதியில் செட்டிப்பட்டி பொன்னுசமுத்திரம் ஏரியில் டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இடைப்பாடி தாசில்தார் அருள்குமார், விஏஓ கருப்பண்ணன் மற்றும் உதவியாளர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏரியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த 2 டிராக்டர்களை மடக்கி பிடித்தனர். இருவாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, விஏஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்களுக்கு தலா ₹50 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்க சங்ககிரி ஆர்டிஓ அமிர்தலிங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Tags : interstate ,
× RELATED துர்நாற்றத்தால் மக்கள் அவதி...