×

காடையாம்பட்டி பகுதியில் அறுவடைக்கு வந்த விருச்சி பூக்கள்; விவசாயிகள் மகிழ்ச்சி

காடையாம்பட்டி, மே 29: காடையாம்பட்டி பகுதியில் விருச்சி பூக்கள் அறுவடைக்கு வந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காடையாம்பட்டி பகுதியில் விருச்சி பூச்செடிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது . இந்த பகுதியில் ஏற்கனவே சாமந்தி, சம்பங்கி, குண்டுமல்லி, ஊசிமல்லி, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு மலர்செடிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், நல்ல லாபம் தரும் விருச்சி பூச்செடிகள் பயிரிட்டுள்ளனர். இந்த வகை செடிகளை கடலுர், சிதம்பரம், அரியலுர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பயிரிடுகின்றனர். இதனை ஒருமுறை பயிரிட்டால் ஆண்டுமுழுவதும் லாபம் தரும் பயிர் என்பதால் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த விருச்சி பூக்களை சேலம் பூ மார்க்கெட்டிற்கு  கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ ₹80  முதல் ₹150  வரையிலும் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : kadiyampatty area ,
× RELATED பைக் மீது கார் மோதி மெக்கானிக் பலி