இன்ஜினியரிங் பட்டதாரி பெண்ணை கடத்திய ஊர்க்காவல்படை வீரர்

கிருஷ்ணகிரி, மே. 29:கிருஷ்ணகிரி அருகே பி.இ.பட்டதாரி பெண்ணை கடத்திச் சென்ற ஊர்க்காவல்படை வீரரை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள துடுக்கானஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(52). இவரது மகள் சந்திரமதி(24). இவர் பி.இ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 24ம் தேதி மதியம் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரமதியின் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில், சந்திரமதியை கிருஷ்ணகிரி அருகே உள்ள பச்சிகானபள்ளி பகுதியைச் சேர்ந்த கலைமணி(29) என்பவர் திருமணம் செய்வதாகக்கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. கலைமணி ஊர்க்காவல்படை வீரராக உள்ளார். இது குறித்து சந்திரமதியின் தந்தை ராஜா, கே.ஆர்.பி டேம் போலீசில் புகாரளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் ஊர்க்காவல்படையை சேர்ந்த கலைமணியைத் தேடி வருகின்றனர்.


Tags : player ,engineering graduate girl ,
× RELATED பாகிஸ்தானுக்கு விளையாட செல்கிறோம்:...