×

தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதி இடையப்பட்டி சமத்துவபுரம் மக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டரிடம் மனு

கரூர், மே28: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கடவூர் தாலுகா இடையப்பட்டி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அன்பழகனிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: இடையப்பட்டி சமத்துவபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் தொட்டி இல்லை. போர்வெலும் இல்லை. இதன் காரணமாக, தண்ணீர் கிடைக்காமல் கடுமையாக அவதிப்பட்டு வருகிறோம். மேலும், தண்ணீர் தேவைக்காக 2 கிமீ தூரத்தில் உள்ள ஏழுர் பகுதிக்கு சென்றாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. மேலும், காவிரி கூட்டு குடிநீர் லைனில் இருந்து எங்கள் பகுதிக்கு மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விடப்படுகிறது. இதன் காரணமாக, தண்ணீர்  தேவைக்காக அலைய வேண்டியுள்ளது. எனவே, எங்கள் பகுதிக்கு நிரந்தமாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : calamity ,
× RELATED ஊத்துக்கோட்டை பகுதிகளில் பறிக்க ஆள்...