×

கல்குவாரி வெடியால் விவசாயம் பாதிப்பு

தேவதானப்பட்டி, மே 25:  தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தில் குடியிருப்பு மற்றும் விளைநிலங்கள் அருகே கல்குவாரியால் விபத்து தொடர்வதாக கூறப்படுகிறது. குள்ளப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட மருகால்பட்டி மற்றும் சந்திராபுரம் உள்ளது. இந்த இரண்டு கிராமங்களில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மருகால்பட்டிக்கும், சந்திராபுரத்திற்கும் இடையே வடக்குபக்கம் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கிராமங்களுக்கும் விளைநிலங்களுக்கும் அருகே இந்த கல்குவாரி செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகளுக்கும் விபத்து ஏற்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திராபுரத்தைச் சேர்ந்த விஜயேந்திரன் கூறுகையில், `` குடியிருப்பு பகுதியின் அருகாமையில் கல்குவாரி செயல்படுகிறது. இதன் வெடி சத்தத்தில் வீடுகள் அதிர்வடைகின்றன. மேலும்  வெடி சத்தத்தில் குழந்தைகள் பாதிக்கப்படுகிறது. விளைநிலங்களை ஒட்டி உள்ளதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சந்திராபுரம்  மற்றும் மருகால்பட்டி அருகே செயல்படும் கல்குவாரியை பார்வையிட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
தபால் வாக்குகளில் அதிமுகவேட்பாளர் ரவீந்திரநாத்குமார், 1,354 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், 2,335 வாக்குகளும், அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 877 வாக்குகளும், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல்அமீது 426 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன் 171 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Tags : plantation ,Kalkwari ,
× RELATED கல்குவாரி நீரில் மூழ்கி மனைவி, மகன்...