×

திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி கருணாநிதி சிலைக்கு மரியாதை

ஈரோடு, மே 24:ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி திமுக.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஈரோடு மக்களவை தொகுதிக்கான தேர்தலில் திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட கணேசமூர்த்தி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையொட்டி, ஈரோடு முனிசிபல்காலனி ரோட்டில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.

கருணாநிதி சிலைக்கு மாலை
ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்கு திமுக வெற்றி வேட்பாளர் கணேசமூர்த்தி நேற்று அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முன்னிலை வகித்தார். இதில், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானம், கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, துணை செயலாளர்கள் செந்தில்குமார், செல்லப்பொன்னி, பகுதி செயலாளர் நடராஜன், மருத்துவ அணி விவேக், வழக்கறிஞர் ரமேஷ், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதேபோல், ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அறிஞர் அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு வெற்றி வேட்பாளர் கணேசமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags : Ganesamoorthy ,DMK ,idol ,Karunanidhi ,
× RELATED தஞ்சை திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா