நெல்ைல, தென்காசி தொகுதிகளில் ஞானதிரவியம், தனுஷ்குமார் அமோக வெற்றி திமுக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நெல்லை, மே 24: நெல்லை, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் ஞானதிரவியம், தனுஷ்குமார் அமோக வெற்றிபெற்றதை வரவேற்று நெல்லை மாவட்டத்தில் திமுகவினர் கொண்டாடினர். செங்கோட்டை: செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்புறம், காந்தி சிலை, பஸ் நிலையம், பாம்பே ஸ்டோர் போன்ற பல்வேறு இடங்களில் நகர திமுக சார்பில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு நகரச் செயலாளர் ரகீம் தலைமை வகித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட பொருளாளர் சேக்தாவூது, மாவட்ட துணைச்செயலாளர்  பேபி ரஜப் பாத்திமா, பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், லிம்ரான்கான், தகவல் தொழில்நுட்ப பிரிவு சாகுல், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இசக்கிதுரை பாண்டியன், வக்கீல் அணி லூக் ஜெயக்குமார், நகர நிர்வாகிகள் காளி, பாஞ்ச் பீர்முகமது, குட்டிராஜா, ஜெயராஜ், மாவட்டப் பிரதிநிதி கல்யாணி, பூங்கொடி, குமார், டெய்லர் சரவணன், கோபால், பால் அய்யப்பன், கலைஞர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஜோதிமணி, பெர்னாட்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செங்கோட்டை மேலூர் பகுதியில் கலைஞர் தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கலைஞர் தமிழ்ச்சங்கச் செயலாளர் வக்கீல் ஆபத்து காத்தான், பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் நிர்வாகிகள் பெர்னாட்ஷா, வேலுமணி, ஓம் சக்தி ஐயப்பன், அழகை அய்யப்பன், ஜோதிமணி, குமார், பேச்சிமுத்து, அய்யம்பெருமாள், காளி, வேலுச்சாமி, பிச்சைமுத்து, தங்கையா தேவர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பணகுடி: பணகுடி காமராஜர் பஸ் நிலையத்தில் நடந்த கொண்டாட்டத்தில் திமுக நகரச் செயலாளர் தமிழ்வாணன், வக்கீல் அணி சகாய புஷ்பராஜ், மாவட்டப் பிரதிநிதி மாணிக்கம், நகர நிர்வாகி முத்துராமன், தொழில்நுட்ப  அணி அமைப்பாளர் விஜயகுமார், செல்வி ஓட்டல்  உரிமையாளர் பெருமாள், ஹோம் நிறுவனத்தின் சுகுமாரன், மகளிர் அணி ஆனந்தி ராஜேஸ், மதிமுக நகரச் செயலாளர் சங்கர், காங்கிரஸ் நகரச் செயலாளர் எட்வின், தெற்கு வள்ளியூர் பஞ்சாயத்துமுன்னாள் தலைவர் இன்ப தங்கராஜ், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இதேபோல காவல்கிணறு பகுதியில் திமுக மகளிர் அணி ஒன்றிய அமைப்பாளர் சாந்தி சுயம்புராஜ் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆவரைகுளம்  உள்ளிட்ட  பகுதிகளில் கூட்டணி கட்சியினர் கொண்டாடினர். திசையன்விளை: திசையன்விளையில் திமுக நகரச் செயலாளர் டிம்பர் செல்வராஜ் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் சவுந்தர், கணேசன், பரமசிவன், நடராஜன், நசுருதீன், பெருமாள், பச்சதுரை, பாலசுப்பிரமணியன், கேப்டன்குமார், பாலு மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஏர்வாடி: ஏர்வாடியில் நகர திமுக செயலாளர் அயூப்கான் தலைமையில் திருக்குறுங்குடி நகரச் செயலாளர் கசமுத்து, ஏர்வாடி நகர காங்கிரஸ் தலைவர் ரீமாபைசல், மதிமுக இளைஞர் அணி சேக் முகமது உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இனிப்பு வழங்கினர்.

கடையநல்லூர்:  கடையநல்லூரில் திமுக நகரச் செயலாளர் சேகனா தலைமையில் நிர்வாகிகள் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் சங்கரன், அப்துல் வகாப், மாரித்துரை, சங்கர், மஸ்தான், ரகுமத்துல்லா, மயில்சாமி, வானுவர் அலி, மாரியப்பன், தங்கமாரி, கனேசன், மூர்த்தி, ஷாகிபு, அப்துல்காதர், சித்திக், காஜா, சுடலைமுத்து, ஈஸ்வரன், கோமு, முருகையா, கருப்பையா, செல்லத்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அம்பை:  அம்பை நகர நகர திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த நகரச் செயலாளர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் ராமசாமி, வசந்த ஆரோக்கிய மேரி, ராமையா, அண்ணாத்துரை, வக்கீல்கள் காந்திமதிநாதன், காஜாமுகைதீன், லட்சுமி அம்மாள், சதன் துரை, அமானுல்லா கான், பிச்சையா, அலெக்ஸாண்டர், கணேசன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சிவகிரி:   வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் முன்னர் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களுக்கு திமுக ஒன்றியச் செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் இனிப்பு வழங்கினார். இதில் நகரச் செயலாளர் சரவணன், நகர அவைத்தலைவர் சிவஞானம், விவசாயத் தொழிலாளர்அணி மாவட்ட துணை அமைப்பாளர் மனோகரன், மதிமுக ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமார், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் நடராஜன், காங்கிரஸ் நகரத் தலைவர் செல்வராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒன்றியச் செயலாளர் செய்யது, திமுக  இளைஞர் அணி நகர அமைப்பாளர் முனீஸ்வரன், பேச்சாளர் திருப்பதி, திமுக நிர்வாகிகள் காளியப்பன், கணேசன், சுருளி, பரமசிவன், குட்டியப்பன், சண்முகையாபாண்டியன், மகேந்திரன், முத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தென்காசி: தென்காசி பழைய பஸ் நிலையத்தில் நகர திமுக செயலாளர் சாதிர் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் கோமதிநாயகம், மதிமுக வெங்கடேஷ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் பால்ராஜ், காங்கிரஸ் ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி டேனி அருள்சிங், சித்திக் முன்னிலை வகித்தனர். இதில்  நகர திமுக நிர்வாகிகள் சொக்கலிங்கம், நடராஜன், பால்ராஜ், அப்துல் கனி, கலை பால்துரை, அணி அமைப்பாளர்கள் மோகன்ராஜ், ராம் துரை, கிட்டு, கோபால் ராம், பாலாமணி, வடகரை ராமர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சங்கரன்கோவில்:  சங்கரன்கோவிலில் திமுக முன்னாள் நகரச் செயலாளர் ராஜதுரை தலைமையில் கட்சியினர்  பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இதில் நிர்வாகிகள் ராஜ், சரவணன், சோம செல்லபாண்டியன், மூத்த உறுப்பினர் அண்ணாவியப்பன், பேச்சாளர் மாரியப்பன், தங்கவேலு, ஜெயக்குமார், யுவன் பாரதி, பிரகாஷ், குருசாமி, செந்தில், காந்திநகர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருவேங்கடம்: கலிங்கபட்டியில் மதிமுக நிர்வாகி ஜோதிராஜ், கிளைச் செயலாளர் ராஜேந்திரன், திமுக கிளைச்செயலாளர் சின்னப்பன்,  இருளப்பசாமி, சுவாமிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கொண்டாடினர்.

வீரவநல்லூர்: சேரன்மகாதேவியில் திமுக ஒன்றியச் செயலாளர் முத்துபாண்டி பிரபு தலைமையில் நகரச் செயலாளர் சுடலையாண்டி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் பழனி, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட நிர்வாகிகள் ரத்தினம், பன்னீர்செல்வம், அபுபக்கர், அண்ணாதுரை, கே.டி.சி கணேசன், வார்டு செயலாளர்கள் மாரிச்சாமி, மேகநாதன், ராசு, ராமகிருஷ்ணன், மலையான்குளம் செயலாளர் சக்திவேல்பாண்டியன் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கினர்.

Related Stories: