கெங்கவல்லியில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க வலியுறுத்தல்

கெங்கவல்லி, மே 23:  கெங்கவல்லியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கெங்கவல்லியில் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இப்பகுதி மக்களுக்கு மேட்டூர் குடிநீர் திட்டம் மற்றும் வலசக்கல்பட்டி ஏரியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கெங்கவல்லி பேரூராட்சி, 1வது வார்டு இந்திரா நகர் காலனி பகுதியில், கடந்த ஒரு வார காலமாக மேட்டூர் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் கூறியும், நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். கோடை காலத்தில் நிலவி வரும் வறட்சியால், பல்வேறு பகுதிகளில் மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இது ேபால் தண்ணீர் வெளியேறி வீணாகி வருவது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : removal ,drinking water pump ,kanavalli ,
× RELATED பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக...