×

புதன்சந்தையில் மாடுகள் விலை சரிவுசேந்தமங்கலம், மே 22: மேய்ச்சல் குறைந்ததால், புதன்சந்தைக்கு நேற்று மாடுகள் வரத்து அதிகரித்து விலை சரிந்தது.

நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்கள் மாடுகளை விற்பனைக்கு ஓட்டி வருகின்றனர்.
இந்த மாடுகளை வாங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் போதிய மழையின்றி, கடும் வறட்சி நிலவுகிறது. மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து போனதால், காசு கொடுத்து தீவனங்களை வாங்கி, கால்நடைகளுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் நேற்று புதன்சந்தைக்கு, அதிகளவில் மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. கோவை, ஈரோடு மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகளும் கொள்முதலுக்காக குவிந்தனர்.

கடந்த வார சந்தையில் ₹24 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட இறைச்சி மாடு, இந்த வாரம் ₹22 ஆயிரத்திற்கும், ₹45 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கறவை மாடு, ₹42 ஆயிரத்திற்கும், ₹11 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கன்றுக்குட்டி ₹9 ஆயிரத்திற்கும் விற்பனையானது. மேய்ச்சல் குறைந்து அதிகளவில் மாடுகள் விற்பனைக்கு வந்ததால் சந்தையில் மாடு ஒன்றுக்கு ₹3 ஆயிரம் விலை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Budhana ,
× RELATED புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு