×

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.44.37 லட்சம்

சென்னிமலை, மே 17:சென்னிமலை முருகன் கோயிலில் நேற்று முன்தினம் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் பழனிக்குமார் தலைமையில், ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நந்தகுமார், பெருந்துறை கோயில் ஆய்வாளர் பாலசுந்தரி, சென்னிமலை கோயில் செயல் அலுவலர் அருள்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில், தைப்பூசத்திற்காக வைக்கப்பட்டிருந்த சிறப்பு 2 உண்டியல்கள் மற்றும் 8 நிரந்தர உண்டியலில் 43 லட்சத்து 19 ஆயிரத்து 906 ரூபாய் பணமும், திருப்பணி உண்டியலில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 745 ரூபாய் பணமும் காணிக்கையாக இருந்தது.

இரு உண்டியல்களிலும் மொத்தம் 44 லட்சத்து 37 ஆயிரத்து 651 ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக இருந்தது. மேலும், நிரந்தர உண்டியலில் 170 கிராம் தங்கமும், 2,530 கிராம் வெள்ளியும் காணிக்கையாக இருந்தது. உண்டியல்கள் எண்ணும் பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags : Chennimalai Murugan ,
× RELATED சென்னிமலை முருகன் கோயில் டோல்கேட்...