×

சென்னிமலை முருகன் கோயில் டோல்கேட் திறப்பு நேரம் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

 

சென்னிமலை, மார்ச் 5: சென்னிமலை முருகன் கோயிலில் தினமும் காலையில் அடிவாரத்தில் உள்ள டோல்கேட் திறக்கும் நேரம் குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

மேலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை முருகன் கோயிலுக்கு வருவதால் மலைப்பாதையில் போக்குவரத்து அதிகமாக காணப்படும். சில பக்தர்கள் டோல்கேட் திறக்கும் நேரத்திற்கு முன்பே வந்து டோல்கேட்டை திறந்து விட சொல்லி கோயில் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வது உண்டு. இதனால் அடிவாரத்தில் உள்ள டோல்கேட் (நுழைவு வாயில்) திறக்கும் நேரம் குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தினமும் காலை 5.30 மணிக்கு அடிவார டோல்கேட் திறக்கப்பட்டு தொடர்ந்து இரவு 7.45 மணி வரை வாகனங்கள் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படும் என்றும், அதேபோல் செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் ஒரு மணி நேரம் முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு அடிவார டோல்கேட் திறக்கப்பட்டு தொடர்ந்து இரவு 8 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அதன் பிறகு மலைக்கோயிலில் இருந்து கீழே வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சென்னிமலை முருகன் கோயில் டோல்கேட் திறப்பு நேரம் கோயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennimalai Murugan Temple ,Temple Administration ,Chennimalai ,Murugan ,temple ,
× RELATED போலீஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து