×

திருப்பூர் - கன்னியாகுமரிக்கு சிறுவன் சைக்கிள் பயணம்

கன்னியாகுமரி, மே 14 : திருப்பூர்  மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜன். இவரது மகன் ஹரி(13). 7ம்  வகுப்பு படிக்கிறார். இவர் கடந்த 7ம் தேதி பசுமை விழிப்புணர்வுவை  வலியுறுத்தி திருப்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் பிரசார  பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணம் திருப்பூர், மதுரை, நெல்லை வழியாக  கன்னியாகுமரி வந்தடைந்தது.

மொத்தம் 430 கிலோ மீட்டர் பயணம்  மேற்கொண்டுள்ளார்.  வரும் வழியில் இயற்கையை பாதுகாக்க வேண்டும். உலகின்  முதல் தூய குடிநீர் மழை. அதை சேமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள்  அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார். முன்னதாக  கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு மாணவன் ஹரி பிரசாரம் செய்தார். அவரைவாழும்கலைஆசிரியர்சங்கரநாராயணன்வரவேற்றார். மாணவன் ஹரியைபொதுமக்கள்மற்றும்சுற்றுலாபயணிகள்பாராட்டினர்.

Tags : Tirupur ,cycling trip ,Kanyakumari ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...