×

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம்

திருப்பூர்,மே14: இந்தியாவில் தொடரும் பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தால் அத்தியாசிய பொருட்களின் விலை அதிகாரிப்பால் ஏழை, எளிய பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டுமென சிஸ்மா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாபுஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா பொருட்களின் விலை குறையும் பட்சத்தில் இந்தியாவில் மட்டும் பெட்ரோலிய பொருட்களின் விலை தினமும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. குறுகிய காலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5. 33பைசாவும், டீசல் ரூ.5.97பைசாவும் உயர்வடைந்து உள்ளதால் இதன்மேல் விதிக்கப்பட்டுள்ள வரிகளை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும். மேலும் லிட்டர் ரூ.67க்கு விற்கப்பட்ட பெட்ரோல் இன்று ரூ.86 ம் என உயர்ந்து வருவதால் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை  வெளி மாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடு ஆகியவற்றிலிருந்து கொள்முதல் செய்யவும், விற்பனைக்காக  ரயில், விமானம், லாரி ஆகியவற்றை பயன்பாடு முக்கியமானது. பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அடிக்கடி வாடகை அதிகரித்துவருகிறது.



 இதனால், உற்பத்திசெலவு அதிகரித்துள்ளதால் தொழில்துறையினரை கலங்கவைத்துள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.ஒரு சில மாநிலங்களில் மாநில அளவிலான மொத்த வரியிலிருந்து ரூ.2 வரை குறைத்துள்ளது. விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்துவோம் என்று கடந்த தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு செய்தனர். ஆனால் கடும் விலைவாசி உயர்வுக்கு அரசுகளே காரணமாக உள்ளன. வரிகளை குறைத்து நாட்டிலுள்ள சிறு குறு நிறுவனங்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். கோடை காலம் துவங்கியதால்  அறிவிக்கப்படாத மின்வெட்டினால் பின்னலாடை தயாரிப்புகள் அனைத்தும் குறித்த நேரத்தில் வெளிமாநிலங்களுக்கு சரக்குகள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மானிய விலையில் சிறுகுறு நிறுவனங்களை கணக்கிட்டு மானியவிலை டீசல் பெறுவதற்கு அடையாள அட்டைகள் வழங்க ஆய்வு செய்வதுடன் அனைவரும் பயன்பெறும் வகையில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.3 வரை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்