×

புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர மாநில அரசு பேருந்தில் மது பாட்டில் கடத்தல்

திண்டிவனம், மே 10: ஆந்திர மாநில அரசு பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி சென்ற டிரைவர் உள்பட 2 பேரை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு சென்ற ஆந்திர மாநில அரசுப் பேருந்தை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் 750 மில்லிலிட்டர் 12 மதுபாட்டில்களும், 500 மில்லிலிட்டர் 20 மதுபாட்டில்கள் மற்றும் 180 மில்லிலிட்டர் அளவுடைய 270 குவாட்டர் மதுபாட்டில் உள்ளிட்ட 302 புதுச்சேரி மாநில  மதுபாட்டில்கள் பேருந்தின் பின்புறம் பயணிகளின் உடமைகள் வைக்கப்படும் டிக்கி மற்றும் பேருந்தின் மேற்கூரையில் இருந்ததை கண்டுபிடித்தனர்.

  தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பஸ் டிரைவரே மதுபாட்டில் கடத்தியது தெரியவந்தது. பஸ்சை ஓட்டிவந்த சித்தூர் மாவட்டம் குத்துவார் பள்ளியை சேர்ந்த ஜெயராமன் மகன் சந்திரசேகர்(48) மற்றும் இவருக்கு உதவியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தாலுகா மானாம்பத்தியை சேர்ந்த கமலக்கண்ணன் மகன்  லோகநாதன் (40) ஆகிய இருவரும் தான் மது பாட்டில்களை புதுச்சேரியிலில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மதுபாட்டில்கள் மற்றும் ஆந்திர அரசு பேருந்தை திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்் ¬மதுபாட்டில்களை கடத்திய சந்திரசேகர் மற்றும் லோகநாதனையும் கைது செய்து   தீவிர விசாரணை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூபாய் 30 ஆயிரம் ஆகும்.

Tags : Aluva ,AP ,Puducherry ,Tirupathi ,
× RELATED கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும்...