×

அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை எஸ்பியிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மனு திருப்பதியில் ஏழைகளை குறிவைத்து

திருப்பதி, மே 10: திருப்பதியில் ஏழைகளை குறி வைத்து அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பி அன்புராஜனிடம் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தாமோகன் மனு அளித்தார். திருப்பதி காவல்துறை அலுவலகத்தில் எஸ்பி அன்பு ராஜனை காங்கிரஸ் கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன் நேற்றுமுன்தினம் சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:

திருப்பதியில் ஏழை மக்களை குறிவைத்து வட்டிக்கு பணம் தருவதாக கூறி பிறகு அவர்களிடம் அதிகமான வட்டியை கேட்டு மிரட்டி வருகின்றனர். இதனால் ஏழை மக்கள் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர். அதிக வட்டிக்கு பணம் தருபவர்கள் சென்னை, விஜயவாடா போன்ற நகரங்களில் இருந்து வந்து நிதி நிறுவனம் என்ற பெயரில் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கந்து வட்டி, மீட்டர் வட்டி போன்றவற்றை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவர்களிடமிருந்து பொது மக்களை காக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Union Minister ,Tribunals ,SPP ,
× RELATED பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு லாலு...