×

(தி.மலை) வீட்டிலிருந்து வெளியேறிய மாணவி கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணை தாத்தாவுக்கு போன் செய்துவிட்டு

 

செய்யாறு, ஜூன் 3: செய்யாறு அருகே வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவியை யாராவது கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி பெற்றோரை இழந்தவர் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். கடந்த மாதம் 28ம் தேதி வீட்டில் இருந்த அவர் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதற்கு இடையில் வாழைப்பந்தல் கிராமத்திற்கு சென்ற அந்த மாணவி அங்கிருந்த ஒருவரிடம் செல்போன் வாங்கி தனது தாத்தாவுக்கு போன் செய்து என்னை தேட வேண்டாம்.

நான் வீட்டுக்கு வர மாட்டேன் என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாத்தா பேத்தியை பல இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை யாராவது கடத்திச் சென்றார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post (தி.மலை) வீட்டிலிருந்து வெளியேறிய மாணவி கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணை தாத்தாவுக்கு போன் செய்துவிட்டு appeared first on Dinakaran.

Tags : Th. Malai ,Seiyaru ,Dinakaran ,
× RELATED (தி.மலை) குழந்தைகளின் பெயர் பதிவு செய்ய...