×

2 மாதத்தில் தொடங்க உள்ளதாக பொதுமேலாளர் தகவல் வேலூர் ஆவினில் ஐஸ்கிரீம், மில்க் ஷேக் பிளான்ட்

வேலூர் மே 9: வேலூர் ஆவினில் ஐஸ்கிரீம், மில்க் ஷேக் பிளான்ட் 2 மாதங்களில் தொடங்கப்படும் என்று பொதுமேலாளர் தெரிவித்தார். வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம்(ஆவின்) பொதுமேலாளர் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. நாள் ஓன்றுக்கு 2 மாவட்டங்களிலும் சேர்த்து 3 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 75 ஆயிரம் லிட்டர் பால், உள்ளூர் விற்பனைக்கும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், 75 ஆயிரம் லிட்டர் பால் பவுடர் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மீதமுள்ள பாலில், பால் உபபொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் வேலூர் ஆவினுக்கு தேவையான ஐஸ்கிரீம்கள் சேலம் ஆவினில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படும். அதேபோல் மில்க் ேஷக் டெட்ரா பேக்குகளில் தயாரிக்கப்பட்டவை சென்னை ஆவினில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். இந்நிலையில் வேலூர் ஆவினில் 2 மாதங்களில் ஐஸ்கிரீம் பிளான்ட், மில்க் ஷேக் (டெட்ரா பேக்குகள் இல்லாமல் பாட்டிலில் அடைக்கப்பட்டவை) பிளான்ட் ஆகியவை 2 மாதங்களில் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஆவின் பொதுமேலாளர் கோதண்டராமன் கூறுகையில், ‘வேலூர் ஆவினில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிரீம்கள் சேலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மில்க் ேஷக் சென்னையில் இருந்து கொண்டுவரப்படுகிறது. ஆவின் நிர்வாக இயக்குனர் உத்தரவின்பேரில் இனி ஐஸ்கிரிம், மில்க் ஷேக் பிளான்ட் வேலூர் ஆவினில் 2 மாதங்களில் அமைக்கப்பட உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளைவிட வேலூர் ஆவின் தற்போது லாபத்தில் இயங்கி வருகிறது. பொதுமக்களை கவரும் வகையில் புதிய இனிப்பு வகைகளும் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Milk Sheikh Plant ,
× RELATED வேலூரில் 107.6 டிகிரி வெயில் பதிவானது...