×

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

 

வேலூர், மே 30: காட்பாடியில் சிறுமியை மிரட்டி 3 மாதங்களாக சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஒரு பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அதே பகுதியில் வசிப்பவர் 17 வயது சிறுவன். இந்நிலையில் சிறுவன், அடிக்கடி சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் சிறுமியை மிரட்டி தொடர்ச்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுவதை பார்த்து தாய் விசாரித்தார்.

அப்போது சிறுமி நடந்த விஷயங்களை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை கண்டித்துள்ளனர். ஆனாலும் அவன் தொடர்ந்து சிறுமியை மிரட்டி தொல்லை கொடுத்துள்ளான். இதுகுறித்து காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் உதவியுடன் சிறுமி நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார், 17 வயது சிறுவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Silmisham Boxo ,Vellore ,Kathpadi ,Katpadi, Vellore district ,
× RELATED ரயிலில் 28 கி.மீ. தூரம் இழுத்து வரப்பட்ட...