×

ஆலங்குளம் அருகே மினிபேருந்து கவிழ்ந்து விபத்து; 36 பேர் காயம்

ஆலங்குளம், மே 8: ஆலங்குளம் அருகே மினிபேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 36 பேர் காயமடைந்தனர். ஆலங்குளத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனியார் மினிபேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு பேருந்துகள் குறிப்பிட்ட நேரம் மட்டும் உள்ளதால் பொதுமக்கள் மினிபேருந்துகளையே பயணத்துக்கு நம்பியுள்ளனர்.  

நேற்று காலை 8.30 மணியளவில் மாயமான்குறிச்சியில் இருந்து ஆலங்குளத்திற்கு மினிபேருந்து புறப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்டோர்  பயணித்தனர். கல்லூரி மற்றும் ஆசிரிய பயிற்சி பள்ளி மாணவிகள், திட்ட அறிக்கை தேர்வு நடைபெற இருந்ததால் அவர்கள் அதற்கான தயார் நிலையில் வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

ஆலங்குளம் அருகே காத்தபுரத்தை சேர்ந்த அருள்ராஜ்(27) பேருந்தை ஓட்டினார். கண்டக்டராக நல்லூரை சேர்ந்த பால்ராஜ் இருந்தார். ரேனியஸ் நகர் அருகே குறுகலான சாலையில் பேருந்து வரும்போது எதிரே லாரி வந்துள்ளது. அதற்கு வழிவிடுவதற்காக மினிபேருந்ைத ஒதுக்கியபோது அவ்வழியாக வந்த பைக் மீது மினிபேருந்து மோதிவிட்டு சாைலயோர பள்ளத்தில் கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர்.
சத்தம்கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஆலங்குளம் தீயணைப்பு துறையினர் மற்றும் எஸ்ஐ சுரேஷ் தலைமையில் வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகளை ஆலங்குளத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் நாரணபுரம் மற்றும் மாயமான்குறிச்சி, பகுதியை சேர்ந்த 36  பேர் காயம் அடைந்தனர்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு: கண்டக்டர் நல்லூரை சேர்ந்த பால்ராஜ், ஆலங்குளத்தை  சேர்ந்த அருள்ராஜ்(30),  நாரணபுரத்தை சேர்ந்த சுப்பம்மாள்(65), வள்ளியம்மாள்(75), செல்வி(40), சக்திவேல் (62), சுரேஷ்(23), வான்மதி (23), வித்யா (19), நித்யா (18),  மாதவன் (15), மாயமான்குறிச்சியை சேர்ந்த மாரியம்மாள் (70),  இசக்கியம்மாள் (50), பழனியம்மாள் (42), சோமசுந்தரம் (74), முருகன் (46), சுப்பையாபிள்ளை (75), மகேந்திரகுமார்,  கவுசல்யா (20), ரோகிணி(25),  சண்முகாபுரத்தை சேர்ந்த ஸ்டெல்லா(24),

மற்றும் மகேஸ்வரி (30), சந்தியா (9), ஜீவிதா (38), ரோஷன் (13), கவிதா (23),  இசக்கிமுத்து (28), அனுசுயா (23), ரதி கலா(32), வின்சென்ட் ராஜ் (43), முப்பிடாதி (17), ஜோதி (21),  முகேஷ் கண்ணா (18)  மகாராணி (13) உட்பட 36 பேர் காயமடைந்தனர். 16 பேரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மகேந்திரகுமாருக்கு கால்முறிவு ஏற்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஆலங்குளம் போலீசார், டிரைவர் அருள்ராஜை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Minibi ,Alankulam ,
× RELATED ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கூடிய பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி!