×

ஊடுபயிர் அசோலா உயிர் உரம் இடுவதால் நெறபயிரை காககும், சிலந்தி எண்ணிக்கை அதிகரிக்கும் வேளாண் பேராசிரியர்கள் ஆலோசனை

சிலந்திகளானது அனைத்து இடங்களிலும் காணப்படும் இரை விழுங்கிகள் ஆகும். உலக அளவில் சுமார் 1 லட்சம் சிலந்தி வகைகள் காணப்படுவதாகவும் ஆனால் அவற்றுள் இதுவரை 34 ஆயிரம் மட்டுமே வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டும் சுமார் 1300 வகை சிலந்திகள் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து வகையான சிலந்திகளும் பூச்சி களை மட்டுமே பிரதான உணவாக உட் கொள்கின்றன.  வலை கட்டும் சிலந்திகள் வலையில் வந்து மாட்டிக் கொள்ளும் பூச்சிகளையும், வலை கட்டாத சிலந்திகள் இரையை தேடி சென்று பிடித்தும் உண்ணும் பண்புகளையுடையவை. நெற்பயிரில் மட்டும் 20க்கும் மேற்பட்ட சிலந்தியினங்கள் காணப்படுகின்றன. எனவே தீமை செய்யும் பூச்சி களை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவதற்கு சிலந்திகள் பெரிதும் உதவி புரிகின்றன என வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ராஜாரமேஷ், ராமசுப்பிரமணியன் ஆகியோர் கூறியது:
ஓநாய்ச் சிலந்தியானது நெற்பயிரில் மிகவும் பரவலாகக் காணப்படும் சிலந்தி இனமாகும். இவற் றின் முதுகு பகுதியில் 3 கோடுகள் காணப்படும். இது சூலம் போன்ற வடிவத்துடன் காணப்படும். வயிற்றுப் பகுதியில் வெளிர் பழுப்பு நிற புள்ளிகள் இரண்டு வரிசையில் அமை ந்திருக்கும். பகல் நேரங்களில் தூர்களின் அடிப்பகுதியிலோ இலையின் அடியிலோ அல்லது நீர் மட்டத்திற்கு மேற் புறத்திலோ காணப்படும். அரிதாக பயிரின் மேற்பரப்பில் காணப்படும்.இவைகள் வலை கட்டாது. அதனால் நேரடியாக இரைகளை தாக்கும் திறன் பெற்றவை. மிகவும் கூர்மையுடைய பார்வைத் திறனைக் கொண்ட இவை இரவினில் இரைகளை அதிகமாக பிடித்து உண்ணும் வழக்கமுடையவை. இரையினை பிடிக்க தரையிலும், தண்ணீரின் மேற்பரப்பிலும் மிகவும் வேகமாக ஓடும் ஆற்றல் பெற்றவை.

வெண்மைநிற முட்டைக் கூடானது பெண் ஓநாய் சிலந்தியின் வயிற்றுடன் ஒட்டிக் கொண்டி ருக்கும். இந்த முட்டைக் கூட்டில் 200 முதல் 300 முட்டைகள் வரை இருக்கும். இளம் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளி வந்தவுடன் தாயின் முதுகுப் பகுதியில் பெருங்கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கும். இதன் இரைகள், குருத்துப் பூச்சிகள், தத்துப்பூச்சிகள், இலை மடக்குப் புழு, வெட்டுக்கிளி, கொம்புப்புழு, குருத்து ஈ. உள்ளிட்ட அனைத்து பூச்சிகள் ஆகும். பைச் சிலந்தி: நெற்பயிரின் தூர்கட்டும் பருவம் வரை மிகுதியாக காணப்படும். தலையின் முன்பகுதி மழுங்கிய சதுர வடிவம் உடையவை. பழுப்பு நிற வயிற்றுப் பகுதியானது முட்டை வடிவமுடையது. இதில் வெள்ளி நிறமுடைய மெல்லிய ரோமங்கள் காணப்படும். இந்தச் சிலந்தியானது இலையின் நுனிக் குச் சற்றுக் கீழே இலையினை முதலில் கீழ்நோக்கி மடக்கியும் பின்பு மேல் நோக்கி மடக் கியும் 3 பகுதிகளையுடைய தடுப்பாக உண்டாக்கி முட்டையிட்டு வாழும். வலை பின்னாது. இரவினில் வேகமாகச் சென்று பூச்சிகளை பிடித்து உண்ணும். இதன் இரைகள், தத்துப்பூச்சிகள் மற்றும் குருத்து ஈ ஆகும்.

தாவும் சிலந்தி: அளவில் சிறியதும் பொதுவாக அழகிய வண்ணத்துடன் காணப்படும் இவை 5 முதல் 15 மிமீ நீளமுடையவை. தலையின் ஓரங்கள் மழுங்கி காணப்படும். நடுக் கண்கள் அளவில் பெரியதாக இருக்கும். கால்கள் குட்டையாகவும் கால் நகங்களுக்கிடையே ஒட்டும் ரோமங்களும் காணப்படும்.வலைப் பின்னாது. பார்வையானது ஓநாய்ச் சிலந்தியைப் போன்றே மிகவும் கூர்மையுடையது. பூனையைப் போன்றே மிக விரைவாகவும், குதித்தும் இரையினை பிடிக்க வல்லது. இதன் இரை கள், குருத்துப்பூச்சி, பச்சைத் தத்துப்பூச்சி, படைப்புழு, வெட்டுப்புழு, இலைமடக்குப்புழு மற்றும் குருத்து ஈ முதலியவை ஆகும். குள்ளச் சிலந்தி; இவை அளவில் சிறியதாகவும் பளபளப்புடனும் காணப்படும். வயிற்றின் மேற்புறத்தில் கருப்பு வட்டங்கள் 2 வரிசையில் அமைந்திருக்கும். மேலும் வயிற்றுப் பகுதியானது தடித்த முள் போன்ற தட்டால் மூடப்பட்டிருக்கும். வலைக் கட்டும். வலையில் சிக்காத பூச்சிகளையும் தேடிச் சென்று பிடிக்கும் ஆற்றல் கொண்டது. பயிரின் அடித்தண்டுப் பகுதி, குப்பை மற்றும் கல்லுக் கடியில் காணப்படும். இதன் இரைகள், தத்துப்பூச்சி மற்றும் குருத்து ஈ உள்ளிட்ட வலையில் மாட்டும் அனைத்து பூச்சிகள் ஆகும்.

வட்ட சிலந்தி: உடற்பகுதியானது பளபளப்பாகவும், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்திலும் மற்றும் பிற அழகிய வண்ணங்களிலும் காணப்படும். பயிரின் மேற்பரப்பில் பயிர்களுக்கிடையே மிகப் பெரிய வலை யினை பின்னும் வழக்கமுடையவை. இவை வலைகளில் தலைகீழாகக் தொங்கிக் கொண்டிருக்கும். இதன் இரைகள், வலையில் வந்து மாட்டிக் கொள்ளும் குருத்துப்பூச்சி, பச்சைத் தத்துப்பூச்சி, இலைமடக்குப்புழு, வெட்டுக்கிளி மற்றும் அனைத்து பூச்சிகள் ஆகும். நீள்தாடை சிலந்தி: இரு தாடைகளும் மற்ற சிலந்தி இனங்களை விட நீண்டு இருக்கும். நீண்ட மெல்லிய ஒரே வரி சையில் நீளும் தன்மையுள்ள கால்களை கொண்டவை. மத்தியான நேரங்களில் இலைகளுக் கிடையே கூடு போன்ற வலைகளை பின்னும். இதன் இரைகள், குருத்துப்பூச்சி, பச்சைத் தத்துப் பூச்சி, இலை மடக்குப் புழு, குருத்து ஈ உள்ளிட்ட வலையில் மாட்டும் அனைத்து பூச்சிகள் ஆகும்.நண்டு சிலந்தி: இச்சிலந்திகள் நடப்பது நண்டை போன்று இருப்பதாலும், முன்னங்கால்கள் நண்டைப் போன்றே நீட்டிக் கொண்டிருப்பதாலும் இப்பெயர் பெற்றது. வயிற்றின் பின் பகுதியானது சற்று அகன்று காணப்படும். இவை பின்புறமாகவும், பக்கவாட்டி லும் நகரும் தன்மை கொண்டவை. இவை வலைக் கட்டாது. காத்திருந்து இரையை பிடிக்கும் ஆற்றல் கொண்டவை. இவை பறவை எச்சம் போன்று தோற்றம் கொண்டு அதனருகில் வரும் பூச்சிகளை பிடித்து உண்ணும். இதன் இரைகள், பச்சைத் தத்துப்பூச்சி, இலை மடக்குப்புழு மற்றும் வெட்டுக்கிளி மற்றும் அனைத்து பூச்சிகள் ஆகும்.

பாதுகாக்கும் வழிமுறைகள்

வயல்களிலும், தோட்டங்களிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் வரை முறையின்றி பயன் படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளால் சிலந்திகள் பெரும்பாலும் அழிந்து விடுகி ன்றன. ரசாயன பூச்சிக்கொல்லிகளை தேர்வு செய்து உபயோகப்படுத்தும் போது நச்சுத்தன்மை குறைவாக உள்ள மருந்துகளை தெளிப்ப தாலும் சிலந்திகள் அதிகம் மடிவதில்லை. தாவர பூச்சி மருந்துகளை, குறிப்பாக வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய் மற்றும் வேப்பம் கோட்டை கரைசல் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது சிலந்திகள் அழிவது கிடையாது. ஓராண்டு பயிர் களில் சில வகையான ஊடுபயிர்கள் பயிரிடுவதாலும், நெல் வயல்களில் அசோலா உயிர் உரத்தை இடுவதாலும் சிலந்திகளின் எண்ணிக்கை கூடும்.

Tags :
× RELATED மாணவ பருவத்திலேயே திட்டமிட வேண்டும்