×

மயிலாடுதுறையில் இன்று ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

 

மயிலாடுதுறை, ஜூலை 27: மயிலாடுதுறை மாவட்டம் கலைஞர் அரங்கத்தில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மயிலாடுதுறை மாவட்ட திமுக செயல்வீரர் கூட்டம் கலைஞர் அரங்கத்தில் அவைத்தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், 2024-25 நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் எந்த ஒரு நிதியும் ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து இன்று (27ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெறுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

The post மயிலாடுதுறையில் இன்று ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Mayiladuthurai ,Mayiladuthurai District ,Mayiladuthurai District Artist Arena ,Artist Arena ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறையில் காவலர்களுக்கு லத்தி ட்ரில் கவாத்து பயிற்சி