×

குளித்தலை அருகே எல்லரசு பாலத்தில் ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் 2 மணி நேரம் ரயில்கள் தாமதம்

குளித்தலை மே 8: கரூர் மாவட்டம், குளித்தலை எல்லரசு பாலம் வழியாக மாயனூரில் இருந்து வரும் தென்கரை வாய்க்கால் பெட்டவாய்த்தலை வரை செல்கிறது. இதில் எல்லரசு பாலத்தில் இருந்து இரண்டு கன்னிவாய்க்கால் ஆலமரம் ரயில்வே தண்டாவாளத்தை தாண்டி செல்கிறது. இதில் மணத்தட்டை, மணப்பாறை ரோடு, வாளாந்தூர், பரளி வரை சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கல் விவசாயிகள் கரும்பு, நெல், வாழை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் ஒப்பந்தகாரர் பணியாளர்களுடன் நேற்று காலை 11 மணியளவில் எல்லரசு பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தின் வழியாக செல்லும் பழங்காலத்து சிறிய கன்னி பாசன வாய்க்காலில் குழாயை அகற்றி புதியதாக சிமெண்ட் சிலாப் கட்டை பொருத்தும் பணி தொடங்கினர்.  இதனால் காலை 8 மணிமுதல் மதியம் வரை செல்லும் பயணிகள் ரயில், பாலக்காடு விரைவு பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டது.  செவ்வாய்கிழமை என்பதால் வழக்கம் போல் ஜனஜதாப்தி விரைவு ரயில் வரவில்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் சிமெண்ட் சிலாப் கட்டை பணி முடிப்பதற்காக ரயில்வே பணியாளர்கள் பணிகள் தொடங்கினர்.  அப்போது மணத்தட்டை மற்றும் சுற்றியுள்ள விவசாயிகள் பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று எல்லரசு பாலத்தில் இருந்து வரும் பிரிவு கன்னி வாய்க்காலில் காலங்காலமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறோம்.  இந்நிலையில் புதிதாக போடப்பட்ட சிமெண்ட் சிலாப் கட்டைகள் வாய்க்கால் மட்டத்திற்கு மேல் போடப்பட்டதால் பாசனத்திற்கு தண்ணீர் செல்லமுடியாது. இதனால் கன்னி வாய்க்கால் பாசன விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என அதிகாரிகளை முற்றுகையிட்டு போராடி வந்தனர்.

 இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை ஆர்டிஓ லியாகத் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகள், ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகள் எல்லரசு பாலத்தில் இருந்து 2 கன்னிவாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு செல்லும் தண்ணீர் சீராக செல்வதற்கு வழியில்லாமல் புதிதாக சிமெண்ட் சிலாப் கட்டை உயர்த்தி போடப்பட்டிருக்கிறது. அதனால் மாற்றி தரை மட்டத்திற்கு செல்லும் வகையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  கோரிக்கையை ஏற்ற ஆர்.டி.ஓ வரும் செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல் மதியம் வரை வரும் ரயில்களை நிறுத்தி அன்று நடைபெறும் ரயில்பாதை பணியில் புதிய சிமென்ட் கட்டை உயரத்தை குறைத்து கன்னி வாய்க்கால் மட்டத்திற்கு போட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் அனைவரும் கலந்து சென்றனர். இதனால் திருச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் விரைவு ரயில் மதியம் 1.50க்கு வந்து மாலை 4.25க்கு தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் இந்த ரயிலில் வந்த பயணிகள் வெயிலின் தாக்கம் தாங்கமுடியாமலும் குடிதண்ணீருக்கும், பெரும் அவதிக்குள்ளாகினர்.

Tags : railway officials ,Bathtool ,Ellora Bridge ,
× RELATED ரூ.60 கோடி லஞ்சம் : ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு