×

குளித்தலையில் திடீரென பெய்த மழையில் சிறுவர்கள் உற்சாகம்

 

குளித்தலை, மே 22: தமிழகத்தில் கோடை காலம் மற்றும் அக்னி நட்சத்திரம் காலம் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக வானிலை துறை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

பொதுமக்கள் கோடையின் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென மழை பெய்ய தொடங்கியது இதனால் சாலையில் சென்ற சிறுவர்கள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ச்சியுடன் சாலையை கடந்து சென்றனர். மழை சிறிது நேரம் பெய்து ஓய்ந்தது.

The post குளித்தலையில் திடீரென பெய்த மழையில் சிறுவர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Kuluthlai ,Agni Nakshatra ,Tamil Nadu ,Tamil Nadu Meteorological Department ,
× RELATED தஞ்சாவூர் ரயில்வே கீழ்பாலத்தில்...