×

அரசு பள்ளி கழிப்பறைகள் நவீனப்படுத்தும் பணி

நாகர்கோவில், மே 8:  அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் மிகவும் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் கழிப்பறைக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளின் கழிப்பறைகள் சுத்தமாக வைக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இந்நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஒரு சுற்றறிக்கை விடுத்துள்ளார். அதில் இந்த விடுமுறை காலம் முடிவதற்கு முன்பே குமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாகவும், சுகாதார முறையிலும் நவீனப்படுத்த வேண்டும், ேமலும் கழிவறை செல்லும் வழியில் அலங்கார ஓடுகள் பதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் அரசு பள்ளி கழிப்பறைகள் நவீனப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கோட்டார் கவிமணி பள்ளியில் கழிப்பறை நவீனப்படுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கழிப்பறையின் உள்ளே டைல்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் கழிப்பறைக்கு செல்லும் வழியில் அலங்கார ஓடுகள் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது. இதுபோல் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறைகள் நவீனப்படுத்தப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...