×

திண்டிவனம் அருகே கிராம மக்களிடம் ₹2.20 கோடி மோசடி

விழுப்புரம்,  மே 7: திண்டிவனம் அருகேயுள்ள எண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களிடம் சுமார் ரூ.2.20 கோடி பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமாரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: எங்கள்  கிராமத்தைச் சேர்ந்த தனுசு மனைவி லட்சுமி என்பவர் குடும்பத்தாருக்கு  சுமார் 40 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் லாரி வாங்கப்போவதாக கூறி 28  பேரிடம் தனித்
தனியே பல தவணைகளில் 17.04.2015 முதல் 15.08.2015 வரை ரூ.2.20  கோடி ரூபாயை எங்களிடம் வட்டி தருவதாக கூறி வாங்கினார். நாங்கள் எங்களிடம்  இருந்த சேமிப்பு பணத்தையும், எங்கள் உறவினர்களிடம் இருந்தும் பணம் பெற்று கொடுத்தோம். ஆனால் இதுநாள்வரை அதனை திருப்பி தரவில்லை.

மேலும் பணம் பெற்றதற்கு எழுத்துப்பூர்வமாக  எதுவும் எழுதியும் தரவில்லை. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது நிலத்தை  விற்று கொடுப்பதாக சொல்லி வந்தார். தற்போது லட்சுமி தலைமறைவாகி விட்டார்.  லட்சுமியின் கணவர் தனுசு மற்றும் அவரின் உறவினர் பாலுராஜன் ஆகியோர் பணம்  தொடர்பாக  கேட்டபோது விரைவில் பைசல் செய்வதாக கூறிவந்தனர். தற்போது  கொடுத்த பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு மனுவில்  
தெரிவித்துள்ளனர்.

Tags : Tindivanam ,
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...