×

ஏழைகளின் சுற்றுலா தலமான கல்வராயன்மலையில் மண்மேடாக காட்சியளிக்கும் படகு குழாம்

சின்னசேலம், மே 7: கல்வராயன்மலையில் தூர்ந்துபோய் மண்மேடாக காட்சியளிக்கும் படகு குழாமை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கல்வராயன்மலை ஏழைகளின் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஓங்கி உயர்ந்த மரங்கள், மூங்கில் குடில், சிறுவர் பூங்கா, நீர்வீழ்ச்சிகள், படகு துறை ஆகியவை உள்ளது. இதனால் இந்த மலைக்கு புதுவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கண்டுகளித்து செல்வார்கள். இங்குள்ள பெரியார், மேகம் நீர்வீழ்ச்சிகளில் கோடையை தவிர மற்ற காலங்களில் நீர்வரத்து இருக்கும். இந்த நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கென்றே பாண்டி, கடலூர், திருவண்ணாமலை போன்ற ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வேன், கார்களில் வந்து ஆனந்த குளியல் போட்டு செல்வார்கள்.
 
 அதற்கடுத்து சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக படகு துறை இருந்து வருகிறது. கல்வராயன்மலையில் உள்ள படகு துறை வனத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு படகு சவாரி செய்வதற்கென்றே 10 படகுகள் விடப்பட்டுள்ளது. படகு துறை அருகிலேயே 2சிறுவர் பூங்காக்கள் உள்ளது. இந்த படகு துறை முறையான பராமரிப்பு இல்லாததால் கரைகள் ஓரத்தில் செடிகள் முளைத்து பரப்பளவு குறுகலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் படகு துறையின் உள் பகுதியில் மழை காலத்தில் மண் அடித்து வரப்பட்டு தூர்ந்து போய் உள்ளது. இதனால் படகு துறையில் போதிய ஆழம் இல்லாமல் மண்மேடாக உள்ளது. மேலும் போதிய நீர் தேக்கி வைக்கப்படாததால் கோடை காலத்தில் வறண்டு, மண்மேடாக படகு துறை காட்சி அளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்துள்ளது.

 கல்வராயன்மலையில் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடங்களில் படகு துறையும் ஒன்றாகும். அத்தகைய படகு துறை முறையான பராமரிப்பு இல்லாததால் காலப்போக்கில் பரப்பளவு, ஆழம் குறைந்து, தற்போது மண்மேடாக காட்சியளிக்கிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும், வனத்துறையும் இணைந்து படகு துறையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். மேலும் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி படகு துறை பரப்பளவை அகலப்படுத்த வேண்டும் என்று  சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே கரடிப்பாக்கம் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற மினிவேனை மடக்கி  சோதனை செய்தனர். அதில் மினிவேன் முழுவதும் மணல் ஏற்றி சென்றதும், அதற்கு எந்த விதமான அனுமதி ஆவணங்கள் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணல் ஏற்றி சென்ற அதே கிராமத்தை சேர்ந்த முனியப்பன் மகன் செல்வகுமார்(27), ராஜேந்திரன் மகன் இளவரசன்(22) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மினிவேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kalvarayanmalai ,boat climber ,poor ,
× RELATED தொடர்ந்து வெயில் வாட்டிய நிலையில் கல்வராயன்மலையில் திடீர் மூடுபனி