×

ஆசிரியர்கள் சமூகத்தின் மனசாட்சியாக செயல்பட வேண்டும் எஸ்ஆர்வி மெட்ரிக்பள்ளி விழாவில் பேச்சு

திருச்சி, மே 7: சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நோக்கி கனவு ஆசிரியரை நோக்கி 2019 நிறைவு விழாவில் உதயச்சந்திரன் ஐஏஎஸ் கலந்து கொண்டு ஆசிரியர்களிடையே  பேசியதாவது: குழந்தைகள் நேசிக்கும் நபராக ஆசிரியர்கள் இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு பயனளிக்கும் நபராக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். வெளி சமூகத்தில் உள்ள எல்லா செய்திகளையும் எடுத்து வந்து வகுப்பறையில் மாணவர்களிடம் கொடுக்கும் உரையாடும் ஆசிரியர்களே சிறந்த ஆசிரியர்கள்.

குழந்தைகள் எதிர்காலம் குறித்த கவலையோடு சரியாக வழிகாட்டும் ஆசிரியராக ஒவ்வொரு ஆசிரியரும் இருக்க வேண்டும். தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் ஆசிரியர்கள் இருக்கும் வரை எந்த தொழில் நுட்பத்தாலும் ஆசிரியர் இனத்தை அழிக்க முடியாது. மொத்தத்தில் ஒரு ஆசிரியர் சமூகத்தின் மனசாட்சியாக செயல்பட வேண்டும் என்றார்.

பள்ளியில் நடந்த 4  நாள் பயிலரங்கை திட்ட இயக்குனராக இருந்து வழிநடத்திய எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி தலைவர் ராமசாமி, செயலர் சுவாமிநாதன், பொருளர் செல்வராஜன், இணை செயலர் சத்தியமூர்த்தி, முதல்வர் துளசிதாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : teachers ,community ,SRV Medicpalli Festival ,
× RELATED அரசு உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு...