×

வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு சிசிடிவி கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார் திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளுக்கான

திருவண்ணாமலை, மே 7: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் ஆய்வு நடத்தினார்.திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.அதையொட்டி, இரண்டு இடங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கண்காணிப்பும், கேமரா காட்சிகளை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் நேரடியாக பார்வையிடும் வசதியும் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களை நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’களின் பாதுகாப்பு அம்சங்களை பார்வையிட்டார்.

மேலும், ஒவ்வொரு மையத்திலும் பொருத்தப்பட்டுள்ள 100 கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையையில் கேமரா பதிவுகள் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படுகிறதா என பார்வையிட்டார்.
மேலும், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட தேவையான வசதிகளை தடையின்றி செய்துத்தர அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். மேலும், மின்தடை ஏற்பட்டாலும், ஜெனரேட்டர் வசதியுடன் கேமராக்கள் இயங்குவதை உறுதி செய்தார்.வாக்கு எண்ணும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை, ஸ்ட்ராங் ரூமில் இருந்து பாதுகாப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் இடத்துக்கு கொண்டுசெல்ல தனி பாதை அமைக்க உத்தரவிட்டார்.
அதோடு, வாக்கு எண்ணும் பணியை பார்வையிடும் முகவர்களுக்கு தேவையான இட வசதி, காற்றோட்ட வசதி, மின் விளக்கு வசதிகளை முறையாக செய்ய உத்தரவிட்டார்.


Tags : Collector ,control room ,voting centers ,CCTV ,constituencies ,Aryan ,Thiruvannamalai ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...