×

கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் ரத்து பொதுமக்கள் ஏமாற்றம் திருவண்ணாமலை

திருவண்ணாமலை, மே 7: தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த மார்ச் 10ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கை நடந்து முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதையொட்டி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம், மாதந்தோறும் நடைெபறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் போன்றவை ரத்து செய்யப்பட்டன. அரசு நலத்திட்டங்கள் வழங்குவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து விட்டதால், மீண்டும் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் நேற்றும் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வந்தனர். அங்கு, குறைதீர்வு கூட்டம் நடைபெறாது என்ற தகவல் அறிந்து ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர்வு மனுக்கள் செலுத்துவதற்கான பெட்டியில், தங்களுடைய கோரிக்கை மனுக்களை செலுத்திவிட்டு சென்றனர்.இந்நிலையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், ற்றுத்திறனாளிகளிடம் இருந்து மட்டும் மனுக்களை அதிகாரிகள் பெற்று கொண்டனர். ஆனாலும், நலதிட்டங்கள் வழங்குதல் போன்றவை தேர்தல் நடத்தை விதிமுறை முடிந்த பிறகே வழங்கப்படும் என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.


Tags : Thiruvannamalai ,collector ,meeting ,office cancellation ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...