×

குமரியில் சுட்டெரிக்கும் அக்னி வெயில்

மார்த்தாண்டம், மே 7: பொதுவாக ஏப்ரல், மே மாதங்கள் கோடைக்காலமாக உள்ளது. இந்நேரத்தில் வெயில் வாட்டி வதக்கும். ஆனால் தற்போது தமிழகத்தில் பிப்ரவரி முதலே வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் சதத்தை தாண்டி அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் உச்சத்தை தொட்டு வெப்பம் விளாசி வந்தது.

குமரி மாவட்டத்திலும் 100 டிகிரியை எட்டி கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்தது. ேகாடை மழை சில நாட்கள் தலைகாட்டிவிட்டு சென்றுவிட்டது. பானி புயலால் மழை பெய்யும் என கூறினர். அதுவும் கைவிரித்து விட்டது. இதனிடையே அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கி உள்ளது. இது 28ம் தேதி வரை நீடிக்கும். இந்த நிலையில் கத்திரி வெயிலின் தாக்கத்தால் வெயில் கொளுத்தி வருகிறது. அடுத்த 3 வாரங்களில் அக்னி வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.இதனிடையே கோடை வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தர்பூசணி, நுங்கு, இளநீர், பதநீர், வெள்ளரிப்பிஞ்சு, எலுமிச்சை மற்றும் கரும்பு சாறு, மோர், பானகம் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்துவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...