இளம்பிள்ளையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது

இளம்பிள்ளை, மே 3:  மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. மேலும், கடந்த மாதம் 4ம் தேதி, இளம்பிள்ளை அருகே பாறைக்காடு பகுதியை சேர்ந்த நூல் வியாபாரி ராஜேந்திரன் என்பவரது கடையில் ரூ46 ஆயிரம் திருடு போனது. தொடர்ந்து வந்த புகார்களின் பேரில், போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது பாட்டப்பன் கோயில் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சரவணன்(33), மாரிமுத்து (21) ஆகியோர் என தெரிய வந்தது. இவர்கள், மகுடஞ்சாவடி அருகே பாலாஜி மனைவி வெண்ணிலா(40) என்பவரது 8 பவுன் நகையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : brothers ,gangs ,
× RELATED பழையகாயலில் பணம் கையாடல் பிரச்னை...