×

சாலையை கடக்க முயன்ற பெண் ஆம்னி பேருந்து மோதி பலி

திண்டிவனம், மே 3: திண்டிவனத்தில் சாலையை கடக்க முயன்ற பெண், பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.புதுச்சேரி வஉசி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற இன்ஜினியர். இவரது மனைவி மாலதி (52). இவர்களது மகன் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவரைப் பார்க்க செல்வதற்காக திண்டிவனத்தில் இருந்து செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் டிக்கெட் புக்கிங் செய்திருந்தார். இதற்காக நேற்றுமுன்தினம் இரவு புதுச்சேரியில்இருந்து பேருந்தில் புறப்பட்டு சென்ற அவர் திண்டிவனம் புறவழிச்சாலையில் வந்து இறங்கினார்.  பின்னர் அங்கிருந்து ஆம்னி பேருந்தில் செல்வதற்காக காத்திருந்தார். அப்போது, எதிரே உள்ள உணவகத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு சாலையை கடக்க முயன்றபோது அதிவேகமாக சென்னையிலிருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மாலதியின் மீது மோதியது. இதில் மாலதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பேருந்து அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது.
இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிற்காமல் சென்ற ஆம்னி பேருந்து குறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விக்கிரவாண்டி போலீசார் சுங்க சாவடிக்கு சென்று விபத்து ஏற்படுத்திய ஆம்னி பேருந்து டிரைவர் தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த கோமதிநாயகம் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : road ,Amni ,
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...