×

நிலவுடமைதாரர்கள் புதிய சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற வேண்டும்

விழுப்புரம், மே 3: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு நிலவுடமைதாரர்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள், வாடகைதாரர்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்திடவும், வாடகை ஒப்பந்தங்களிலான நிபந்தனைகள் மீறப்படாமல் பின்பற்றுவதை உறுதி செய்திடவும், குத்தகை, வாடகை ஒப்பந்தங்களை எளிதாக மேற்கொள்ளவும், ஏற்கனவே அமலில் இருந்த தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960ஐ ரத்து செய்து கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் தமிழ்நாடு நிலவுடமைதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் வரன்முறை சட்டம் 2017ஐ அமலாக்கம் செய்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியுள்ளது. இச்சட்டப்பிரிவு 30ன் படி விழுப்புரம் மாவட்டத்தின் வருவாய் கோட்ட அலுவலர்களாக சப்-கலெக்டர்களும், வருவாய் கோட்டாட்சியர்களும் தங்களது கோட்ட எல்லைக்குள்ளான பகுதிகளில் அமைந்த கட்டிடங்களின் வாடகை ஒழுங்குமுறை அலுவலராக நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் நிலவுடமைதாரர்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள், வாடகைதாரர்கள் தங்களது குத்தகை, வாடகை ஒப்பந்தங்களை பதிவுசெய்துகொள்ள குத்தகை வெப் போர்டல் ஆன www.tenancy.tn.gov.in என்ற இணையதளத்தில் தேவையான தரவுகளை பதிவேற்றம் செய்து உரிய அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

Tags : Landlords ,
× RELATED வாடகை பாக்கி உள்ளவர்களை டிச.31க்குள்...