×

பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

பண்ருட்டி, மே 1: பண்ருட்டி ரத்தனா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 500க்கு 460 மதிப்பெண்கள் இருவரும், 400க்கு மேல் 14 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன், தாளாளர் ராமகிருஷ்ணன், முதல்வர் ரவி மற்றும் பள்ளி இயக்குனர்கள் தேவநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் உடன் இருந்தனர்.




Tags : Panrutti Ratana Matriculation School ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை