நூதன முறையில் மூதாட்டியிடம் 5 பவுன் அபேஸ்


சுரண்டை, மே 1:  சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்த செல்வராஜ்  மனைவி கிரேஸ் பால்தாய்(75). 2 நாட்களுக்கு முன்பு சுரண்டை பஸ் நிலைய சாலையில் நடந்து சென்றார். அப்போது அவரிடம் பேச்சு கொடுத்த மர்மநபர், முதியோர் உதவித்தொகை ஆயிரத்தில் இருந்து ரூ.1500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான படிவத்தை நிரப்பி தருகிறேன். வங்கிக்கு வாருங்கள் என அழைத்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த 5 பவுனை செயினை கழட்டி வாங்கி கொண்டு மர்மநபர், கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றார். இதுகுறித்து கிரேஸ் பால்தாய், சுரண்டை போலீசில் புகார் செய்தார். போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்மநபரை தேடி வருகின்றனர்.


Tags : pub ,anthropologist ,Abees ,
× RELATED பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம்...