×

கன்னியாகுமரி தொகுதியில் பறக்கும்படைகள் சோதனை மீண்டும் தொடக்கம்

நாகர்கோவில், ஏப்.26: மக்களவை தேர்தலுக்கு பின்னர் கலைக்கப்பட்ட பறக்கும்படைகள் மீண்டும் செயல்பட தொடங்கிய நிலையில் வாகனங்களில் கட்சி கொடிகளை அகற்ற வற்புறுத்துகின்றனர்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் தேர்தலையொட்டி காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளை இணைத்து 72 பறக்கும்படை குழுக்கள் செயல்பட்டு வந்தன. ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடந்த பின்னர் இந்த பறக்கும் படைகள் செயல்படவில்லை. பறக்கும்படை கலைக்கப்பட்டு அதில் இருந்த பணியாளர்கள வழக்கமான பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தநிலையில் இந்த பறக்கும்படை குழுவினர் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி முதல் பணி தொடங்கினர்.

 இந்த பறக்கும்படையினர் பொது இடங்களில் கட்சி கொடிகள் கட்டப்படுவதை தடுத்தல், கார்களில் கட்சி கொடிகளை கட்டி செல்வதை தடுத்தல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்தல் போன்ற பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். பணம், பரிசு பொருட்கள்கொண்டு செல்வதை பறிமுதல் செய்தல் தொடர்பாக உத்தரவு ஏதும் இவர்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில் கட்சி கொடி கட்டி செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி அவர்களது வாகனங்களை நிறுத்தி கொடிகளை அகற்ற வற்புறுத்துகின்றனர். நாகர்கோவில் - குளச்சல் சாலையில் தம்மத்துக்கோணம் பகுதியில் நேற்று காலையில் வாகன சோதனை நடத்திய பறக்கும்படை குழுவினர் கட்சி கொடி கட்டி வந்த வாகனத்தை நிறுத்தி கொடியை அகற்ற கூறி வற்புறுத்தினர்.

Tags : trail ,constituency ,Kanyakumari ,
× RELATED நள்ளிரவு வரை வந்திறங்கிய வாக்கு பெட்டிகள்