×

ஆத்தூரில் ெதாட்டி இருக்கு.. தண்ணீர் இல்ைல

செம்பட்டி, ஏப். 25:  ஆத்தூரில் காட்சிப்பொருளாக உள்ள தண்ணீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செம்பட்டி அருகே ஆத்தூரில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பல தொட்டிகள் காட்சிப்பொருளாய் உடைந்துள்ளன. மேலும் ஆழ்துளை கிணறு மின்மோட்டார்கள் மாயமாய் மறைந்துள்ளன. குறிப்பாக ஆத்தூர் நுழைவுப்பகுதி, ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி உள்பட பல இடங்களில் தண்ணீர் தொட்டிகள் காட்சிப்பொருளாய் உள்ளன. தவிர அக்ரஹாரம் மேற்கு பகுதியில் உள்ள தொட்டி உள்பட பல இடங்களில் திருகு குழாய்கள் இல்லாததால் தண்ணீர் வீணாகி கழிவுநீரில் கலக்கின்றன.

இதை தடுக்க குச்சியையும், துணியையும் வைத்து அடைத்துள்ளனர். மேலும் தொட்டி நிரம்பியதும் மோட்டாரை முறையாக ஆப் செய்யாமல் விடுவதால் தண்ணீர் வீணாகி கழிவுநீரில் கலக்கிறது. கடும் வறட்சி நேரத்தில் இப்படி தண்ணீர் வீணாவதை கண்டு பொதுமக்கள் வேதனையடைகின்றனர். ஆலம்பட்டியில் கழிவுநீர் தேக்கத்தில் தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. எனவே ஆத்தூர் யூனியன் அதிகாரிகள் காட்சிப்பொருளாக உள்ள தண்ணீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், திருகு குழாய்கள் பொருத்தி தண்ணீர் வீணாவதையும் தடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Athur ,
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...